சங்கமம்

Thursday, March 25, 2010

ஆண் உடலில் , ஒரு பெண்

மங்கையராக பிறப்பதற்கு மாபெரும் தவம் செய்ய வேண்டும் என்பார்கள்...

அனால் , அப்படி எல்லாம் தவம் செய்து , யாரும் பெண்ணாகவோ , ஆணாகவோ பிறப்பதாக தெரியவில்லை.... எல்லாம் வல்ல இயற்கையாலோ, அல்லது எல்லாம் வல்ல இறை அருளாலோ தான் அப்படி பிறப்பதாக பொதுவாக நம்புகிறார்கள்... எக்ஸ் , ஒய் தான் நிர்ணயிக்கிறது என்கிறது அறிவியல்...

இதை எல்லாம் மீறி, ஒரு பெண் என்ற நிலையை அடைவதற்கு, ஒரு பெண்நாக பிறப்பதற்கு, நம்மை போன்ற ஒரு சக உயிர் மேற்கொண்ட மாபெரும் தவம் தான், மாபெரும் போராட்டம் தான், நான் வித்யா என்ற புத்தகம்... வித்யா என்ற பெண் எழுதி உள்ளார்...
(
பிறக்கும் போதும் இவர் பெண் தான்... ஆனால், ஆண் என்ற உடலில் இவர் பிறந்து விட்டார்.... இது இயற்கை செய்த தவறா, இறை செய்த தவறா, - தெரியவில்லை... ஆனால் தண்டனை இவருக்கு தான்...

கேலி, கிண்டல் , அவதூறு, சிலசமயம் அடி, உதை,,, அவ்வபோது சில நல்லவர்களின் சந்திப்பு - இதுதான் இவர் வாழ்க்கையாக இருந்தது....

அரவாணிகளுக்கு , யாரும் ஒரு நல்ல வேலை கொடுப்பதில்லை... எனவே அவர்கள், பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் என செல்கிறார்கள்...

உடனே நாம் என்ன நினக்கிறோம்,... இந்த அரவாணிகள் எல்லாம் மோசம்பா ... மோசமான தொழில் செய்பவர்கள்.. கொஞ்சம் தள்ளியே இருப்போம்...

இப்படி நாம் நினைப்பதால், நாம் அவர்களுக்கு வேலை கொடுபதில்லை... வேலை கிடைக்காததால், அவர்கள், பிச்சை பாலியல் தொழில்...

என்ன ஒரு விஷ சக்கரம் பாருங்கள்

இத்தனை கஷ்டத்திலும், தன் சுயமரியாதையை இழக்கத கண்ணியம், இவரை உயர்த்தி காட்டுகிறது....

நம்மை போன்ற சக மனிதர்கள், கொஞ்சம் அன்பு , கொஞ்சம் விழுப்புணர்வு கொண்டு இருந்தால், இந்த துயர்கள் அவசியம் இல்லாமல் போய் இருக்கும்.... ஆகா, நாமும் இந்த துயருக்கு காரணம் என்று புரியும் போது , தலை குனிகிறோம்...

சில இல்லகிய வாதிகள், ,அறிவி ஜீவிகள் இதை எழுதி இருந்தால், பாலியல் பார்வையில் எழுதி, உலக இலக்கியம் படைத்தது இருப்பார்கள்...
இவர், சக அரவாணிகள் கண்ணியத்தையும் பாதிக்காத வகையில், சமூக அக்கறை உடன் எழுதி உள்ளார்...

அரவாணியாக பிறப்பது, என்ற இந்த விஷயத்தில், முறையான வழிகாட்டுதல் , தெளிவு , புரிதல் இல்லாதது தான் பல பிரச்சினைகளுக்கு காரணம்... இந்த புத்தகம , அரவாணிகள் உலகத்தை அறிமுகம் செய்து வைகிறது... அவர்கள் சார்பான வேதனை புரிகிறது....

ஆனால்,. புத்தகம் டாகுமென்ரி போல் இருக்கும் என யாரும் நினைக்க வேண்டாம்... சீராக எழுத பட்டுள்ளது... நூல் ஆசிரியர் , மொழி ஆர்வம் மிக்கவர் என்பதால், நல்ல நடையில் , புத்தகம் உள்ளது...இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும், நேர்மறை தொனியில் அவர் வாழ்க்கையை அணுகும் விதம்தான் இந்த நூலின் தனி சிறப்பு
முழுதும் சோகம் என்று இல்லாமல், அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள், அன்பான் சீண்டல், நடு ரீதியான கேலிகள் என யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது

ஆபரஷன் நடப்பதை விளக்கும் இடம், நம் உடலையும் மனதயும் பதற வைகிறது....

அரவாணியாக பிறக்காத ஒருவர், சந்தர்ப சூழ்நிலையால், மன ரீதியாக பாதிக்க பட்டு, தன்னை ஒரு அரவாணி என கருதி கொண்டு, ஆபரேஷன் வரை சென்றால், எவ்வளவு விபரீதம்?

சற்று வித்யாவின் அப்பாவை நினைத்து பார்போம்.. தனது மகன், ஆசையுடன்,கனவுடன் வளர்த்த மகன், திடீர் என ஒரு நாள் , நான் ஒரு பெண் என கூறினால் அவருக்கு எப்படி இருந்து இருக்கும்...

இதை பற்றிய விழிப்புணர்வே , இன்றைய உடனடி தேவை... தன்னை , பெண் என உணரும்போது, உடனடியாக, தைரியமாக, பெரியவர்களிடம் சொல்லும் அளவுக்கு , பெரியவர்களிடம் விழிப்புணர்வு தேவை...
அறிவு பூர்வமாக அணுகப்பட்டு, மன ரீதியான சிகிச்சை அல்லது உடல் ரீதியான , பால் மற்று சிகிச்சை பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு, அவர்களை அன்கீக்கரம் செய்வதே, நம்மை போன்ற சக மனிதர்கள், இயபலான வாழ்கை நடத்த உதவும்

கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதை படிக்க வேண்டும், ... பொழுது போக்குக்காக அல்ல.... சமுகத்தின் பழுதை நீக்குவதற்காக....

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Wednesday, March 24, 2010

என் கன்னத்தில் " பளார் " விட்ட எழுத்தாளர் வண்ணநிலவன்

சில பழங்குடி இனங்களில், இன்னும் கம்ப்யூட்டரையே பார்த்திராத மக்கள் உண்டு... அதனால் அவர்கள் வாழ்கையில் மகிழ்ச்சி குறைந்து விடுமா என்றால் இல்லை.... எளிய வாழ்விலும் முழுமை உண்டு... மன்னிக்கவும், ..எளிய வாழ்வில்தான் முழுமை உண்டு...

ஒரு சிறிய நாடு... அங்கு வாழும் மக்கள்... அவர்களின் பிறப்பு, இறப்பு, காதல், காமம்.,மரணம்.... ஒருவருக்கொருவர் உதவி கொள்கிறார்கள்... வெறுப்பும் உண்டு... என்ன செய்தாலும், எதில் ஈடு பட்டாலும், மனதில், ஒரு வெறுமை..எப்போதாவது சந்தோசம்...

"ஏதோ ஒன்று" அவர்களை பரவச படுத்துகிறது.... ( ஆனமிகம், கட்சி, ஏதாவது இசம் என்று வைத்து கொள்ளுங்கள்) அது தங்கள் எல்லா துயரங்களையும் தீர்த்து விடும் என நம்புகிறார்கள்.... அந்த ஏதோ ஒன்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள்..

இது என்ன ஒட்டு மொத்த மனித இனத்தை ஆராய்ச்சி செய்யும் , தத்துவ நூலா என வியப்பு ஏற்படுகிறது அல்லவா ?

அதுதான் கிடையாது.... ஒரு சிறிய நாடு என்பதை ஒரு சிறிய தெரு என்றும் ஏதோ ஒன்று என்பதை மழை என்றும் வைத்து கொண்டால், அதுதான் , வண்ண நிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு ....

************************************************************************


ஊரில் உள்ள எல்லா தெருக்களையும் இந்த புது மணல் எப்படி நிறைத்து விடுகிறது ? "சிறு வயதில் அம்மாவிடம் கேட்டால்
சாமிதான் போடறார்.. வேற யார் போடுவார்கள் "


இதை எல்லாம் படிக்கும் போது, எளிமை , குழைந்ததனம் போன்ற விஷயங்களை நாம் இழந்து விட்டோம் என்பது புரிக்றது....

ஒரு எளிய மனம் எதையும் நம்பும்.... எதையும் நேசிக்கும்... ரசிக்கும்..ஆனால், ஒரு கன்னிங் mind , எதனாலும் திருப்தி அடையாது... .என்று நம்மை யோசிக்க வைக்கின்றன இந்த வரிகள்...

பிலோமி கதாபாத்திரம் , அடையும் ஒரு வித கிளு கிளு தன்மையை அனைவரும் புருந்து கொள்ள முடியும்... நுட்மாக செதுக்க பட்டுள்ள பாத்திர படைப்பு..

சாம்சன் அண்ணன் , எஸ்தர் சித்தி செய்யும் விசித்திரமான காட்சியை , அற்புத மேரி எதிர்பாராமல் பார்ப்பதும் , அதன் பின் , அவள் நடவடிக்கயில் ஏற்படும் மாற்றங்களும் , மன தத்துவ ரீதியில் சொல்ல பட்டுள்ளது...எஸ்தர் சித்தியை மோசமானவளாக காட்டமல், அது அவள் இயல்பு என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லி சொல்வதை ரசிக்க முடிகிறது... எந்த இடத்திலும், கதாசிரியர் , நீதி போதனை செய்யவில்லை... நடப்பதை அப்படியே சொல்கிறார்...

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இயல்பு உண்டு , ஒவ்வொரு நாளும் தனித்தன்மை வாய்ந்தது என்று விளக்கும் இடத்திலும், வெயில் காலம் ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு மாதிரி இருக்கும்... ஒரே இடத்தில கூட, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் ( அதாவது , அப்படி தோன்றும் ) என சொல்லும் இடத்திலும், நுட்பமான பார்வை தெரிகிறது...ஞாயிற்று கிழமை , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி போனாலும், சாம்சனுக்கு கிடைக்கும் பொழு போக்கு , கொஞ்சம் பொறாமை பட வைத்தாலும், அவனுக்கு என்று ஒரு திறமை இருப்பதும், பொறுப்பற்ற குடிகாரன், திடீரென ஒழுக்கம் நிறைந்தவனாக ( தற்காலிகமாக ) மாறுவதும், நாம் அன்றாடம் காணும் வாழ்வியல் எதார்த்தம் தான்... முழுமையாக நல்லவனும் இல்லை... முழுமையாக கெட்டவனும் இல்லை...

ஜீனோவின் வழியாக, ஒரு இளம் பெண்ணின் , நுட்மான மன உணர்வு காட்டபடுகிறது....

பொதுவாக ஒரு கதை , ஒரு இடத்தில தொடங்கி, ஒரு முழுமை யை நோக்கி செல்லும்... இதில், ஒவ்வொரு இடமும் முழுமையாக இருப்பதால், ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்க முடிகிறது.. குழப்பம் அற்ற தெளிவான நடை...

ஒரு கதாபாத்திரம், அவருக்கு ஏற்படும் பிரச்னை , அதற்கு எப்படி தீர்வு காண்கிறார் , என்ற முறையில் எழுதகி இருந்தால், அந்த தீர்வை தெரிந்து கொண்ட பின், அந்த புத்தகத்தை எறிந்து விடலாம்... அல்லது, நீதி போதனை , தத்துவ விளக்கம் , என்றெல்லாம் இருந்தால், அது சிலருக்கு மட்டுமே பிடிக்கும்...

ஆனால் , இந்த நாவல், எல்லோர்ருக்கும், அவரவர் அனுபவம் படிப்பு அனுபவம், சார்ந்து , ஒவ்வொரு அர்த்தத்தை தரும் என்பதால், இது ஒரு முக்கியமான நாவல்...

" . அவர்கள் மழைக்கு அடிமையாக இருந்தார்கள்...இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசையா திடீர் என குணம் அடைந்து விடுவார் என நம்பினாள் " என்ற முடிவு வரிகளை படிக்கும் போது, நாம் எந்த விஷயத்துக்கு அடிமையாக இருக்கிறோம்? என யோசித்தேன்.... இருதயத்து டீச்சர் போல, இப்படி வெளிபடையாக நம்பாவிட்டாலும், உள்ளோர பல நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம்...

"விமலா விம்மினாள் .. படிமம்,,, தொன்மம்... பிரான்ஸ் கதாசிரியர்.. உலக இலக்கியம் ஆண் குறி, யோனி, " என்றெல்லாம் படித்து, தமிழ் நாவலையே ஒதுக்கி வைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டன,,,, அப்படி பட்ட என்னயே, தமிழிலும் , நுட்பமான உணர்வுகளை தொட முட்யும் என , என் கன்னத்தில் அடித்தது போல் , இந்த நாவல் மூலம் சொல்லி இருக்கிறார் , வண்ணநிலவன்...

ரெய்னீஸ் ஐயர் தெரு _ சீரான பாதை கொண்ட , நுட்பமான தெரு
*****************************************************************************

வெளியீடு கிழக்கு பதிப்பகம்.... நாவல் அருமை... வடிவமைப்பு அருமை... நோக்கம் அருமை... நிறைந்து இருக்கும் ஏழு பிழைகள் கொடுமை... கொடுமை... கொடுமை.... இதனால், சில வட்டார ( புது )வார்த்தைகளை படிக்கும் போது, உண்மையில் அதுதான் வார்த்தையா, அல்லது எழுத்து பிழையா என்று குழம்ப வேண்டி இருக்கிறது .. கொஞ்சம் விழித்து கொண்டு பிழை திருத்துங்கள் , proof reader சார்